கொரிய பெண்களின் அழகு இரகசியம்: முட்டை பேஸ் மாஸ்க்!!!
Author: Hemalatha Ramkumar16 October 2024, 7:42 pm
இன்று பெண்களிடையே கொரிய அழகு பராமரிப்பு வழக்கம் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரிய பெண்கள் பின்பற்றி வரும் அழகு பராமரிப்பு குறிப்புகள் 100% முடிவுகளை தந்து சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் மேம்படுத்துகிறது. அந்த வகையில் கொரிய அழகு கலாச்சாரத்தில் அழகான முகத்திற்கு முட்டைகள் பயன்படுத்துவது வழக்கம். புரோட்டின் சத்தின் முக்கியமான மூலமாக அமையும் முட்டை நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் சருமத்தில் உள்ள பிக்மென்டேஷன், கரும்புள்ளிகள் மற்றும் சன் டேன் போன்றவற்றை போக்கி சரும ஆரோக்கியத்திற்கு சிறந்த பலன்களை அளிக்கிறது. எனவே இந்த பதிவில் உங்களுடைய சரும பராமரிப்பு வழக்கத்தில் முட்டைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
முட்டை வெள்ளை கரு மாஸ்க்
முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கரண்டி வைத்து நுரை பொங்கும் வரை நன்றாக அடித்து பின்னர் முகத்தில் தடவவும். இது சருமத்தை இறுக்கி, சரும துளைகளின் அளவுகளை குறைக்கிறது. பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளவும்.
முட்டை மஞ்சள் கரு மற்றும் தேன் மாஸ்க்
ஒரு முட்டையை எடுத்து அதில் உள்ள மஞ்சள் கருவை மட்டும் தனியாக பிரித்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள அதிகப்படியான வறட்சி நீங்கி, சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் போஷாக்கு கிடைக்கும்.
முட்டை மஞ்சள் கரு மற்றும் ஆலிவ் எண்ணெய் மாஸ்க்
ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை மஞ்சள் கருவோடு சேர்த்து முகத்தில் தடவவும். வறண்ட சருமத்திற்கு நீரேற்றம் அளிப்பதற்கு இந்த மாஸ்க் சிறந்தது. இது சருமத்தின் நெகிழ்வு தன்மையை மேம்படுத்துகிறது.
இதையும் படிக்கலாமே: இரண்டே செகண்ட்ல உங்க எனர்ஜிய கன்னா பின்னான்னு அதிகமாக்க இந்த ஹேக் டிரை பண்ணுங்க!!!
முகத்திற்கு முட்டைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
*முட்டைகளுக்கு அலர்ஜி கொண்ட நபர்கள் முட்டையை முகத்தில் பயன்படுத்தினால் அதனால் சிவத்தல், அரிப்பு அல்லது எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.
*சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு முட்டை மாஸ்க் வறண்ட சருமம் அல்லது தடிப்புகளை உருவாக்கலாம்.
*வேக வைக்கப்படாத முட்டைகளில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா இருக்கும் என்பதால் அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது.
*எண்ணெய் சருமம் கொண்டவர்கள் அதிகப்படியாக முட்டையின் மஞ்சள் கருவை பயன்படுத்தக் கூடாது. அது சரும துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி அதனால் முகப்பருக்கள் ஏற்படலாம்.
எனவே முட்டைகளை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்பு எப்பொழுதும் ஒரு பேட்ச் சோதனை செய்து பார்ப்பது பாதுகாப்பானது. மேலும் எப்போதும் ஃபிரஷான மற்றும் நல்ல தரமான முட்டைகளை பயன்படுத்துங்கள். முட்டை மாஸ்க் பயன்படுத்திய பிறகு ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக அதன் பயன்பாட்டை நிறுத்திவிட்டு தோல் நிபுணரை அணுகவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.