கறிவேப்பிலையை இப்படி யூஸ் பண்ணினா ஆறடி வரை கூந்தல் வளருமாம்!!!
Author: Hemalatha Ramkumar13 May 2022, 10:24 am
கறிவேப்பிலை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வோம். ஆனால், அதை சாப்பிடாமல் தூக்கி எறிபவர்கள் தான் அதிகம். கறிவேப்பிலையில் உள்ள நன்மைகள் தெரிந்தால் அதை தூக்கி எறியாமல் சாப்பிடுவீர்கள்.
கறிவேப்பிலை ஒன்று மட்டுமே போதும் முடியின் வளர்ச்சியை மேம்படுத்த . முடியில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் கறிவேப்பிலை ஒன்றை பயன்படுத்தி சரி செய்யலாம். அடர்த்தியான, கருமையான கூந்தல் வேண்டும் என்று நினைப்பவர்கள். நாள்தோறும் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள்.
கறிவேப்பிலையில் காணப்படும் வைட்டமின் ஏ கண்களில் உள்ள கார்னியா பாதிப்படையாமலும் கண் பார்வை குறைபாடு இல்லாமலும் பாதுகாக்கிறது. உடலுக்கு தரும் நிறைவான ஆரோக்கியம் போன்றே கூந்தல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியம் தருகிறது. கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள் கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. கறிவேப்பிலையில் புரதம், பீட்டா, கரோட்டின் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது.
வெறும் வயிற்றில் கறிவேப்பிலை:
காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை 5 இலைகளை எடுத்து மென்று சாப்பிட வேண்டும். அப்படி இல்லையென்றால் ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து 5-6 கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அதில் உள்ள கறிவேப்பிலை மென்று சாப்பிட்டு வடிகட்டிய தண்ணீரை குடிக்கவும். இதனால், கெட்ட கொழுப்புகளும் கரையும், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
கறிவேப்பிலை எண்ணெய்:
தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை , மருதாணி இலை சேர்த்து நன்கு காய்ச்சி ஆற வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்ப்பதால் முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும். இந்த எண்ணெயை தலைக்கு குளிக்கும் போது சற்று சூடாக்கி தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் முடி வேர்களில் வெடிப்பு இல்லாமல் முடி உதிர்வது நின்று நன்றாக வளரும்.
கறிவேப்பிலை மாஸ்க்:
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, தயிர் இரண்டு டேபிள்ஸ்பூன், வெந்தயம் 1/4 டீஸ்பூன் சேர்த்து நன்கு அரைத்து அதை தலையில் மாஸ்க் போல் போட்டுக் கொண்டு தலைக்கு குளிக்கவும். இப்படி செய்வதால் கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
கறிவேப்பிலை பொடி:
குழந்தைகள் கறிவேப்பிலை சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு கறிவேப்பிலை பொடி என்று கடைகளில் விற்கப்படுகிறது அப்படி இல்லையென்றால் வீட்டிலேயே தயார் செய்து சாதத்துடன் கிளறி கொடுக்கலாம்.
கறிவேப்பிலையுடன் நல்லெண்ணெய் அல்லது நெய் கலந்து இட்லி , தோசைக்கு தொட்டு சாப்பிட கொடுக்கலாம்.
கறிவேப்பிலை பொடி வயிற்றில் ஏற்பட்டுள்ள பல பிரச்சனைகளையும் சரி செய்யும்.
வயிற்று போக்கு, வாய்ப்புண் சரி செய்யும் கறிவேப்பிலை:
*கருவேப்பிலை பொடியை தேனில் கலந்து வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவி வந்தால் ஓரிரு நாட்களில் குணமாகிவிடும்.
*வயிற்று போக்கு குணமாக வேண்டுமெனில் 25 கறிவேப்பிலை இலைகளை எடுத்து அரைத்து அதை மோரில் கலந்து குடிக்கவும்.
கறிவேப்பிலை இலை, மருதாணி இலை, வேப்பிலை பத்து எடுத்து நன்கு அரைத்து காயவைத்து, சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து தினமும் தலைக்கு தேய்த்து கொள்ளலாம். முடி உதிர்வது நிற்கும் கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.