இளம் வயதில் ஏற்படும் சுருக்கங்களுக்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா???

Author: Hemalatha Ramkumar
13 June 2023, 10:47 am

வயதாகும் பொழுது முகத்தில் சுருக்கங்கள் கோடுகள் போன்றவை ஏற்படுவது சகஜம் தான். ஆனால் ஒரு சிலருக்கு இளமையாக இருக்கும் பொழுதே முதியவர்கள் போன்ற சுருக்கங்களும், கோடுகளும் தற்போது வரத் தொடங்கியுள்ளன. இந்த பிரச்சனையால் இன்று பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நமது தவறான உணவு முறை. இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அனைவருக்குமே அழகான, தெளிவான சருமம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். நமது சருமத்தின் அழகை மேம்படுத்த பல்வேறு விதமான முயற்சிகளை நாம் செய்வோம். எனினும், வயதாகும் பொழுது சுருக்கங்கள் மற்றும் கோடுகள் ஏற்படத்தான் செய்யும். இதனை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை நம்மால் நிச்சயமாக தடுக்க முடியும். அதற்கு நீங்கள் ஒரு சில உணவுகளை தவிர்த்தாலே போதும்.

இந்த லிஸ்டில் முதலில் இருப்பது பதப்படுத்தப்பட்ட உணவு. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அதிக அளவில் காணப்படுகிறது. உணவு விரைவில் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக கெமிக்கல்களும் சேர்க்கப்பட்டு இருக்கும். இதன் காரணமாக நமது சருமம் சேதமடைகிறது. மேலும் அதிகப்படியான நீர் தேக்கம், கொலாஜன் குறைபாடு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. ஆகவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அதிலிருந்து விலகி இருப்பது சுருக்கங்கள் மற்றும் கூடுகளை தவிர்க்க உதவும்.

அடிக்கடி டீ காபி குடிக்கும் பழக்கம் இருந்தால், உங்களுக்கு விரைவாக சுருக்கங்கள் மற்றும் கோடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காபியில் காணப்படும் காஃபின் நமது உடலை டீஹைட்ரேட் செய்வது மட்டுமல்லாமல், முகத்தில் உள்ள ஈரப்பதத்தை உறுஞ்சிவிடுகிறது. ஆகவே உங்கள் சருமம் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் டீ, காபியை தவிர்ப்பது நல்லது.

அதிக அளவு சர்க்கரை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நல்லதல்ல. சர்க்கரை நமது ரத்தத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸின் அளவை அதிகரிக்கிறது. இது நமது சருமத்தில் பலவிதமான சேதங்களை ஏற்படுத்தும். ஆகவே உங்கள் சருமத்தை எப்பொழுதும் இளமையாக வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்கள் உணவில் சர்க்கரையை அகற்றுவது நல்லது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 2692

    0

    0