பாலோடு இந்த ஒரு பொருளை கலந்து ஃபேஸ் பேக் போடுங்க… நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு ரிசல்ட் கட்டாயம் உண்டு!!!
Author: Hemalatha Ramkumar12 September 2024, 11:01 am
அனைத்து வகையான சரும பராமரிப்பு பொருட்களிலும் பால் என்பது அனைவருக்கும் மிகவும் எளிதாக கிடைக்கும் ஒன்று. அதே நேரத்தில் இது குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு இயற்கை பொருளாக அமைகிறது. இது எந்த வகையான சரும பராமரிப்பு வழக்கத்திலும் ஒரு அற்புதமான பொருளாக செயல்படுகிறது. பாலை உங்களுடைய சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்ப்பது உங்களுடைய சருமத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். லாக்டிக் அமிலம், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கிய பால் சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்கிறது, அதாவது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, சருமத்திற்கு தேவையான போஷாக்கு மற்றும் ஈரப்பதத்தை வழங்குகிறது.
மேலும் இது பொலிவிழந்த சருமத்தை பளிச்சென்று மாற்றுகிறது. சருமத்தில் காணப்படும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்கி முகப்பருக்கள் மற்றும் எரிச்சலில் இருந்து சருமத்திற்கு நிவாரணம் அளிக்கிறது. பாலில் காணப்படும் வீக்க எதிர்ப்பு பண்பானது சருமத்தை ஆற்றி அதனை மென்மையாக்கி, பளபளப்பாக மாற்றுகிறது.
மினுமினுக்கும் சருமத்தை பெறுவதற்கு பாலை நீங்கள் பல்வேறு விதங்களில் பயன்படுத்தலாம்.
கிளென்சர்
ஒரு காட்டன் பந்தை எடுத்து அதனை பாலில் முக்கி உங்களுடைய சருமம் முழுவதிலும் தடவி வர மென்மையான மற்றும் மினுமினுக்கும் சருமத்தை இயற்கையாக பெறலாம்.
எக்ஸ்ஃபோலியேட்டர்
ஓட்ஸ் அல்லது அரிசி மாவுடன் பாலை கலந்து அதனை முகத்தில் ஸ்கிரப் செய்யுங்கள். இது முகத்தில் உள்ள இறந்த சரும செல்களை அகற்றி சருமத்திற்கு போஷாக்கு வழங்கி அதனை பளபளப்பாக மாற்றும்.
ஃபேஸ் பேக்
மஞ்சள் தூள் மற்றும் தேனுடன் பாலை கலந்து அந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்னர் சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவவும். மஞ்சள் சருமத்தில் வீக்கம் ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது. அதே நேரத்தில் தேனானது சருமத்திற்கு தேவையான போஷாக்கை வழங்குகிறது.
டோனர்
உங்களுடைய சரும பராமரிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நீங்கள் ரோஸ் வாட்டருடன் பாலை கலந்து பயன்படுத்தலாம். இது சரும pH அளவை சமநிலைப்படுத்தி துளைகளை இறுக்கி, எரிச்சலை ஆற்றுகிறது. மேலும் சருமத்திற்கு அமைதியான விளைவு அளித்து அதனை பளபளப்பாக்குகிறது.
வாழைப்பழ ஃபேஸ் பேக் வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் பால் சேர்த்து ஃபேஸ் பேக் ஆக உங்கள் முகத்தில் தடவுங்கள். வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த கலவை சருமத்தை ஆழமாக மாய்சரைஸ் செய்து அதனை மென்மையாக்கி பளபளக்க செய்கிறது.