உங்களுக்கு தினமும் மேக்கப் போடுற பழக்கம் இருக்கா… அப்படின்னா நைட் தூங்குறதுக்கு முன்னாடி இத நீங்க கண்டிப்பா செய்யணும்!!!

Author: Hemalatha Ramkumar
1 November 2024, 11:23 am

முகத்திற்கு மேக்கப் பயன்படுத்துவது நம்முடைய தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கு உதவும். நம் சருமத்திற்கு உகந்த அழகு சாதன ப்ராடக்டுகளை வாங்கி பயன்படுத்தும் அதே சமயத்தில் இரவு தூங்குவதற்கு முன்பு மேக்கப் அகற்றுவதிலும் முக்கியத்துவம் காட்ட வேண்டும். தூங்குவதற்கு முன்பு முகத்தில் உள்ள மேக்கப்பை நீங்கள் அகற்றாவிட்டால் அதனால் பல சரும பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இந்த பதிவில் மேக்கப்பை படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஏன் அகற்ற வேண்டும் என்பதற்கான மூன்று காரணங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சரும தொற்றுகள் 

இரவு முழுவதும் நீங்கள் மேக்கப்பை அப்படியே வைத்திருக்கும் பொழுது அதனால் அலர்ஜி மற்றும் தோலில் வீக்கம் மற்றும் சிவத்தல் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் இதனால் உங்களுடைய கண்களும் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. கண்கள் வீங்கி காணப்படுவது மற்றும் கண்களைச் சுற்றி தொற்றுகள் ஏற்படலாம். மேக்கப் பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு நம்முடைய கண்களை சேதப்படுத்தும். 

இதையும் படிக்கலாமே: பீட்ரூட் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்: ஃபெஸ்டிவலுக்கு தயாராக இது ஒன்னு போதும்!!!

வயதான அறிகுறிகள்

மேக்கப்பை முகத்தில் அப்படியே வைத்திருப்பது கொலாஜனை பாதிக்கும். கொலாஜன் என்பது சருமம், எலும்புகள், தசைகள் மற்றும் பிற இணைப்பு திசுக்களின் அமைப்புக்கு மிகவும் அவசியமான ஒரு புரோட்டீன். முக்கியமான இந்த ப்ரோட்டீன் தோலின் நெகிழ்வுத் தன்மை மற்றும் உறுதிக்கு காரணமாகிறது. நீண்ட நேரத்திற்கு உங்களுடைய மேக்கப் அப்படியே விட்டுவிட்டால் அது கொலாஜனை உடைத்து விடும். இதனால் உங்களுக்கு மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகள் ஏற்படலாம். எனவே உங்களுடைய மேக்கப்பை அகற்றி விட்டால் உங்கள் சருமத்தை வயதான அறிகுறிகளில் இருந்து நீங்கள் பாதுகாக்கலாம். 

பிரேக்-அவுட் 

தீபாவளி இப்போது முடிவடைந்த நிலையில் பண்டிகைக்காக நீங்கள் உங்கள் முகத்தில் அதிக மேக்கப் வழக்கத்தைவிட அதிகம் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அதனை அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டால் அதனால் சருமத்தில் உள்ள துளைகள் அடைக்கப்பட்டு முகப்பருக்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் பிளாக் ஹெட் அல்லது ஒயிட்ஹெட் ஏற்படலாம். அளவுக்கு அதிகமாக மேக்கப் பொருட்கள் பயன்படுத்துவதால் சருமத்தின் இயற்கை எண்ணெய்கள் அகற்றப்படலாம். எனவே மேக்கப்பை நீங்கள் சரியான நேரத்தில் அகற்றாவிட்டால் அதனால் சருமம் வறண்டு எரிச்சல் அடையும். எனவே சருமத்தில் உள்ள மேக்கப்பை அகற்றி அதற்கு தேவையான மாய்ஸ்ரைசரை பயன்படுத்துங்கள். 

எனவே அடுத்த முறை உங்கள் சருமத்திற்கு மேக்கப் போடும்பொழுது நிச்சயமாக இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு அதனை அகற்றி விட மறக்காதீர்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 477

    0

    0