இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் தங்கம்…!!!

Author: Babu Lakshmanan
14 October 2023, 11:58 am

இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் தங்கம்…!!!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

நேற்று மாலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.44,080-ஆகவும், கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.5,510ஆக விற்பனையானது. இந்த நிலையில், 2வது நாளாக இன்றும் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360  குறைந்து ரூ.44,440ஆகவும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.5,555ஆகவும் விற்பனையாகிறது. அதேபோல, 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,025ஆகவும், சவரன் ரூ. 48,200ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.76க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 705

    0

    0