தீபாவளி பர்ச்சேஸ் இன்னும் முடியல.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

Author: Hariharasudhan
1 November 2024, 10:29 am

தீபாவளிக்கு மறுநாளான இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் 70 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 385 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னை: உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வரும் தித்திக்கும் தீபாவளித் திருநாள், சர்வதேச அளவில் மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றம், உலகின் ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளின் நாணயக் கொள்கைகள் மற்றும் அமெரிக்க தேர்தல் ஆகியவை காரணமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க: மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு… 50 பேர் கவலைக்கிடம் : உஷார் மக்களே.!!

அதிலும், தீபாவளி நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உச்சத்தை தொட்டது. இந்த நிலையில், தீபாவளி மறுநாளான இன்று (நவ.1), ஆறுதல் அளிக்கும் விதமாக தங்கம் விலை குறைந்துள்ளது. இதன்படி, இன்று சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 385 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 59 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Silver bangles

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 63 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி ஒரு கிராம் 3 ரூபாய் குறைந்து 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • samantha refused to act in sudha kongara movie சமந்தா செய்த காரியம்; சுதா கொங்கரா மனதில் ஏற்பட்ட சோகம்! அடப்பாவமே