ஆரம்பிப்போமா.. மீண்டும் மெல்ல உயரத் தொடங்கும் தங்கம் விலை

Author: Hariharasudhan
6 November 2024, 10:37 am

சென்னையில் ஒரு சவரன் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னை: தீபாவளி திருநாள் விடுமுறையையொட்டி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம், கடந்த 2 நாட்களாக இறங்குமுகத்திலே காணப்பட்டது. மேலும், ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினங்கள் இருந்தாலும், தங்கம் விலை கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை உயர்ந்து உள்ளது. மேலும், நிறைவுப் பகுதியை எட்டியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலாலும், தங்கம், பிட்காயின் உள்ளிட்டவற்றின் மதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக வணிக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Silver

இதன்படி, இன்று (நவ.6) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 365 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 870 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: முதலமைச்சர் பதவியில் நீங்க உட்காருங்க.. துணை முதலமைச்சர் நடிகை வைத்த கோரிக்கை!

மேலும், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Sathyaraj family political problem கட்டப்பா வீட்டில் குளறுபடி…மகள் மகன் எடுத்த அதிரடி முடிவு…குழப்பத்தில் சத்யராஜ்..!