மாலை உயர்வு.. காலை குறைவு – இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
22 October 2024, 10:36 am

சென்னையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2 குறைந்து 7,300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னை: உலகின் மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றம், சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளின் நாணய கொள்கைகள், அமெரிக்க தேர்தல் ஆகியவை காரணமாக தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, இன்று (அக்.22) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 2 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், நேற்று (அக்.21) காலை ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பின்னர், நேற்று மாலை 2 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 302 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்த நிலையில், இன்று காலை மீண்டும் 2 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கம் 7 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 755 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Silver

மேலும், வெள்ளி ஒரு கிராம் 1 ரூபாய் உயர்ந்து 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!