நகை வாங்குற பிளான் இருக்கா…அப்போ இதுதான் சரியான சான்ஸ்: 4வது நாளாக தங்கம் விலை சரிவு…!!

Author: Rajesh
26 April 2022, 11:55 am

சென்னை: தங்கம் விலை 4வது நாளாக குறைந்துள்ளது நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் இந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 22ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.39,672 ஆக இருந்தது. அது 23ம் தேதி ரூ.39,560 ஆக குறைந்தது.

24ம்தேதி விடுமுறைநாள் என்பதால் அன்றும் அதே விலையில் நீடித்தது. நேற்று விலை மீண்டும் குறைந்து ரூ.39,296க்கு விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.39,048க்கு விற்கப்படுகிறது.

தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4912க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ.4,881க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.70.50க்கு விற்கப்பட்டது. இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.70,500க்கு விற்கப்படுகிறது.

  • ajith kumar team won second place belgium car race விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!