தீபாவளி அன்று அதிர்ச்சி.. வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம்
Author: Hariharasudhan30 October 2024, 10:30 am
தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், சென்னையில் ஒரு கிராம் தங்கம் 65 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சர்வதேச அளவில், மத்திய கிழக்கு பகுதிகளில் உயர்ந்த புவிசார் அரசியல் பதற்றம், ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளின் நாணயக் கொள்கைகள் மற்றும் அமெரிக்க தேர்தல் ஆகியவற்றின் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், தீபாவளி திருநாளுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் வரலாறு காணாத உச்சத்தை தங்கம் அடைந்து உள்ளது.
இதன்படி, இன்று (அக்.30) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 59 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 945 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 63 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: சூப்பர் பவர் உள்ளது என கூறி கல்லூரி மாணவர் விபரீத முயற்சி : கோவையில் சோகம்!
அதேபோல், வெள்ளி ஒரு கிராம் ஒரு ரூபாய் உயர்ந்து 109 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.