அதுலாம் எனக்கு ஜுஜூப்பி.. மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி!

Author: Hariharasudhan
11 October 2024, 1:40 pm

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெல்லி: உலகின் முன்னணி பத்திரிகை நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ப்ஸ் (Forbes), அவ்வப்போது டாப் நபர்களைப் பட்டியலிட்டு வெளியிடும். இதில் சினிமா பிரபலங்களும் அடிக்கடி காட்சி தருவர். இந்த நிலையில், இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதன்படி, முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தில் உள்ளார்.

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவலின்படி, 2023ஆம் ஆண்டை விட 27.5 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இதனால் அவரது நிகர சொத்து மதிப்பு 119.5 பில்லியன் டாலராக உள்ளது. அதேநேரம், அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு 108.3 பில்லியன் டாலராக உள்ளது. இதன் காரணமாக முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க: ரத்தன் டாடாவுக்கு அடுத்தது யார்? காத்திருக்கும் வாரிசுகள்!

மேலும், அவரது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிகவும் ஆடம்பரமான முறையில் 5 ஆயிரம் கோடி செலவில் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையிலும், அவரது சொத்து மதிப்பால் இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, கெளதம் அதானி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். அதானி குடும்பத்தின் சொத்து மதிப்பு 116 பில்லியன் டாலர் ஆகும். இதற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் 43.7 பில்லியன் டாலர்க சொத்துகளுடன் சாவித்ரி ஜிண்டால் உள்ளார். இவர் O.P. ஜிண்டால் குழுமத்தின் தலைவராவார். தொடர்ந்து, நான்காவது இடத்தில் ஷிவ் நாடார் உள்ளார். HCL நிறுவனத்தின் நிறுவனத் தலைவரான இவரது சொத்து மதிப்பு 40.2 பில்லியன் டாலர் ஆகும்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 425

    0

    0