அட்ரா சக்க… பொருளாதார வளர்ச்சியில் உச்சம் பெற்ற இந்தியா : இரண்டாவது முறையாக இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2022, 2:00 pm

சர்வதேச நிதியம், வருடாந்திர அடிப்படையில் டாலர் மதிப்பீட்டு அளவில் எடுத்த பொருளாதார வளர்ச்சிக் கணக்கீட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்ததாக ஆசியாவின் பவர்ஹவுஸ் என்று அறியப்படும் இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 இன் கடைசி மூன்று மாதங்களில் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது, இங்கிலாந்தை ஆறாவது இடத்திற்குத் தள்ளியது. பொருளாதாரத்தில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்துவது இது இரண்டாவது முறையாகும், முதலாவது 2019 இல் இதுபோல் பின்னுக்கு தள்ளி இருந்தது.

புளூம்பெர்க் அறிக்கையின்படி, மார்ச் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் அளவு ரொக்கமாக 854.7 பில்லியன் டாலராகும் ஆகும். மாறாக, இங்கிலாந்தின் அதே அளவு 814 பில்லியன் டாலராகும் ஆகும் நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக சரியும் என சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம், வட்டி விகிதங்கள் அதிகரிப்பு, சமச்சீரற்ற பருவநிலை மற்றும் சர்வதேச வளர்ச்சியில் மந்தநிலை போன்ற காரணங்களால் நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முன்பு கணிக்கப்பட்டதைவிட குறையும் என்பது தற்போதைய மதிப்பீட்டின் மூலமாக தெரியவந்துள்ளது.

அதன்படி, முன்பு 8.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி தற்போது 1 சதவீதம் குறைந்து 7.7சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் ஆட்சித் தலைமை மாறவுள்ள சூழலில் இதுபோன்ற பொருளாதார வீழ்ச்சி புதிதாக பொறுப்பேற்கும் பிரதமருக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இங்கிலாந்து கடந்த 40 ஆண்டுகளாக மிக வேகமாக உயரும் பணவீக்கப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு 2024 வரை தொடரும் என அந்நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!