தங்கத்துக்கும் இன்னைக்கு லீவ்.. இன்றைய நிலவரம் என்ன?
Author: Hariharasudhan10 November 2024, 11:47 am
சென்னையில் தங்கம் விலை இன்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.7,275- க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.58,200 க்கும் விற்பனை ஆகிறது.
சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலை அடுத்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சட்டென கிராமுக்கு 150 ரூபாய்க்கு மேல் தங்கம் குறைந்தது. ஆனால், நேற்று மீண்டும் 60 ரூபாய்க்கு மேல் அதிகரித்தது. இதனால் பருத்தி மூட்டை குடோனிலே இருந்திருக்கலாம் என்பது போல தங்கம் விலை அமைந்தது.
ஆனால், நேற்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கம் விலை குறைந்தது. இன்றும் அதே நிலையே நீடிக்கிறது. இதன்படி, இன்று (நவ.10) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் மாற்றமில்லாமல் 7 ஆயிரத்து 275 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ்.. காலமெல்லாம் பேர் சொல்லும் சாதனைகள் என்னென்ன?
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 780 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் மாற்றமில்லாமல் 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.