200 ரூபாய் நோட்டு செல்லாதா? உண்மை என்ன?

Author: Hariharasudhan
12 October 2024, 6:21 pm

சேதமான, அழுக்கடைந்த 200 ரூபாய் நோட்டுகளை 137 கோடி அளவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுள்ளது.

டெல்லி: இந்தியாவில் பணத்தின் மதிப்பு ரூபாய் என்ற அளவில் மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில், தற்போது ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 ஆகிய நாணயங்களும், ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2,000 என்ற ரூபாய் நோட்டுகளும் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளன. தற்போதைய நிலவரப்படிம் பெரும்பாலும் யுபிஐ எனப்படும் ஆன்லைன் பரிவர்த்தனையை பலர் விரும்பினாலும், இன்னும் பலர் ரூபாய் நோட்டுப் புழக்கத்தில் இருந்து மீளவில்லை.

இதற்கு, அவர்களது வாழ்வாதாரம், பழக்க வழக்கங்கள், சடங்குகள் ஆகியவை காரணிகளாக இருக்கின்றன. ஆனால், இவர்களும் டிஜிட்டல் இந்தியாவில் தான் உள்ளனர். எனவே, பணப் புழக்கம் என்பது அனைவரது மத்தியிலும் கணிசமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது ரூ.200 நோட்டுகள் செல்லாது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இதில் உண்மையில்லை.

இதையும் படிங்க: அதுலாம் எனக்கு ஜுஜூப்பி.. மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி!

கடந்த 2016ஆம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அறிவித்தது. இது இந்திய வணிகச் சந்தையில் மாபெரும் இழப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், அதற்குப் பதிலாக ரூ.500 புதிய நோட்டு, ரூ.200 மற்றும் ரூ.2,000 புதிய நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது. பின்னர், ரூ.2,000 நோட்டும் செல்லாது என அவை அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன.

notes

இந்த கால இடைவெளியில் புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மக்கள் அனைவரையும் சென்றடைந்தது. இதனால் இந்த இரு ரூபாய் நோட்டுகளின் புழக்கம் வெகுவாக அதிகரித்தது. இதன் காரணமாக, அதிக அழுக்குகள், தேய்மானம், குறிப்புகள் ஆகியவற்றுடன் ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. எனவே, மொத்தமாக 200 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி பெற்று, மறு உருவாக்கம் செய்ய திட்டமிட்டது.

இதன்படி, இதுவரை 137 கோடி ரூபாய் மதிப்பிலான 200 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற்றுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல், 633 கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. எனவே தான் பொதுமக்களிடையே 200 ரூபாய் நோட்டுப் புழக்கம் குறைந்துள்ளது. அதேநேரம், 200 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை இதுவரை ரிசர்வ் வங்கி விடவில்லை.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?