நானும் உன்கூட தான் வருவேன்.. தங்கத்திற்கு நிகராக உயரும் வெள்ளி விலை!
Author: Hariharasudhan21 October 2024, 10:33 am
சென்னையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து 7,300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியும் கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னை: மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றம், அமெரிக்க தேர்தல், தங்க பத்திரத்தில் முதலீடு மற்றும் அடுத்தடுத்து வரும் பண்டிகை காலங்கள் ஆகியவை காரணமாக தங்கம் இன்று மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்று (அக்.21) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 755 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? ரூ.58 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை!
மேலும், வெள்ளி ஒரு கிராம் 2 ரூபாய் உயர்ந்து 109 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதன் மூலம் தங்கம் தொடர்ந்து விலை ஏறும் நிலையில், வெள்ளியும் அதற்கு ஏற்றார் போன்று விலை உயர்கிறது.