ரூ.59 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Author: Hariharasudhan
29 October 2024, 10:29 am

சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 60 ரூபாய் உயர்ந்து 7,375 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் 59,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: சர்வதேச அளவில், மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றம், உலகின் ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளின் நாணயக் கொள்கைகள் மற்றும் அமெரிக்க தேர்தல் ஆகியவை காரணமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உச்சத்தை தொட்டு உள்ளது.

அதன்படி, இன்று (அக்.29) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 60 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 375 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 59 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : தீபாவளி போனஸ்.. 3வது முறையாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் அதிகரிப்பு!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 63 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி ஒரு கிராம் 1 ரூபாய் உயர்ந்து 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Jailor 2 cast and crew ஜெயிலர் 2-வில் சிவராஜ்குமாருக்கு பதில் இவரா…ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நெல்சன்..!