வார இறுதியில் மாற்றமில்லாமல் தொடரும் தங்கம் விலை.. வெள்ளி விலை என்ன?
Author: Hariharasudhan7 December 2024, 11:12 am
சென்னையில் இன்று (டிச.7) மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 7 ஆயிரத்து 115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: முகூர்த்த நாட்கள், சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தங்கம் விலை கடந்த சில வாரமாக அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல், கமாடிட்டியைப் பொறுத்து தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில், இன்று வார இறுதி நாட்கள் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இதன்படி, இன்று (டிச.7) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 7 ஆயிரத்து 115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 56 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் 7 ஆயிரத்து 764 ரூபாய்க்கும், சவரன் 62 ஆயிரத்து 112 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மேலும், வெள்ளி விலையில் ஒரு கிராம் 1 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இதையும் படிங்க : விஜயின் கடைசி ‘நச்’.. கைதட்டிய ஆதவ் அர்ஜூனா.. கைவிடப் போகிறாரா திருமா?