வார இறுதியில் முதலீட்டாளர்கள் நிம்மதி… ஏற்றத்துடன் நீடிக்கும் இந்திய பங்குச் சந்தைகள்… !!!

Author: Babu Lakshmanan
14 July 2023, 2:19 pm

வாரத்தின்‌ கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள்‌ ஏற்றத்துடன்‌ தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 65,558.89 என்ற புள்ளிகளுடன்‌ தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி 199 புள்ளிகள் அதிகரித்து 65,757 புள்ளிகளாக உள்ளது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்‌ நிஃப்டி 66 புள்ளிகள்‌ உயர்ந்து 19,480 புள்ளிகளில்‌ வர்த்தகமாகி வருகிறது.

LTIMindtree, TCS, Infosys,Tech Mahindra, HCL Tech உள்ளிட்ட நிறுவனங்களின்‌ பங்குகள்‌ ஏற்றம்‌ கண்டு வருகின்றன. HDFC Life, NTPC, Power Grid Corp, Titan Company, Axis bank உள்ளிட்ட நிறுவனங்களின்‌ பங்குகள்‌ சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, பிரபல கட்டுமான நிறுவனமான CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் நேற்று 8.91 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று 0.44 புள்ளிகள் உயர்ந்து 9.35 புள்ளிகளாக வர்த்தமாகி வருகிறது.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!