WIPRO நிறுவனத்தின் இந்திய பிரிவின் புதிய தலைவர் யார் தெரியுமா? அனுபவமுள்ள முக்கிய புள்ளியை நியமனம் செய்த நிறுவனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2022, 10:12 pm

கேபிஎம்ஜி இந்தியாவின் முக்கிய பதவியில் இருந்த சத்யா ஈஸ்வரனை விப்ரோ நிறுவனம் இந்தியப் பிரிவு தலைவராக நியமித்துள்ளது.

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் இந்திய பிரிவின் புதிய தலைவராக சத்யா ஈஸ்வரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Wipro Appoints Satya Easwaran as Country Head, India

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சத்யா மும்பை பல்கலைக்கழகத்தில் எல்க்டாரனிக்ஸ் பிரிவில் பட்டம் பெற்று, நிதி பிரிவில் எம்பிஏ முடித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவின் சன்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகம் பாடத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் மென்பெருள் சேவை, கிளவுட் தொழில்நுட்பம், டிஜிட்டல் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். மேலும் கேபிஎம்ஜி இந்தியா நிறுவனத்தில் பிஸ்னஸ் கன்சல்டிங், தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளின் தலைவராக சத்யா இருந்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்