பிரபல நடிகரால் என் சினிமா கேரியரே போச்சு…புலம்பும் வாரிசு நடிகை!
Author: Udayachandran RadhaKrishnan14 November 2024, 2:04 pm
பிரபல நடிகரால் தனது சினிமா கேரியர் பாழாகிவிட்டதாக வாரிசு நடிகை மனம் திறந்து நொந்துள்ளார்.
சக நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படும் அந்த நடிகர், உச்சநடிகர் வீட்டு நாயகனாக திரையுலகில் கலக்கி வருகிறார்.

இவர் தற்போது படங்களை இயக்கியும், நடித்து வருகிறார். ஆனால் இந்த நடிகரால் தனக்கு 2 வருடமாக பட வாய்ப்பே கிடைக்கவில்லை என நடிகை புலம்பி தள்ளியுள்ளார்.
அந்த நடிகை தனது தந்தையால் திரையுலகுக்கு அறிமுகமானவர். இருப்பினும் பட வாய்ப்பை தந்தது இந்த உச்ச நடிகர் வீட்டு நாயகன் தான்.
இதையும் படியுங்க: படக்குனு தீபக் காலில் விழுந்த டிராமா குயின் ஜாக்குலின் : ஓட்டு வாங்க நடிப்பா?!
ஏனென்றால் படத்தை இயக்கியதே உச்ச நடிகரின் மகள்தான். இருந்தாலும் தனது தந்தையால் வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமான அந்த நடிகை, முதல் படமே பெரிய நடிகர் என்பதால் சினிமா வாய்ப்பு நமக்கு பிரகாசம் என நினைத்துள்ளார்.

ஆனால் படத்தில் காதல், காமம் காட்சிகள் மட்டுமே தூக்கலாக இருந்தது. படம் தோல்வியை சந்தித்தால் அந்த நடிகை மனம் நொந்து போனார்.
முதல் படமே தோல்வி, அந்த நடிகை ராசியில்லாத நடிகை என பெயர் வாங்கினார். 2 ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்தாக கூறிய அவர், பின்னர் ரீ ரிலிஸ் ஆன போது படத்தை தலையில் தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடியதாகவும் கூறினார்.