ஒட்டுத்துணியில்லாம கூட நடிப்பேன்.. ஆனால் : அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டவர்களுக்கு நடிகை பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2025, 1:31 pm

இந்த காலத்தில் சினிமாவில் மட்டுமல்ல எந்த துறையிலும் பெண்கள் கோலோச்ச அட்ஜெஸ்ட்மெண்ட் பெரிய தடையாகவே உள்ளது. இது குறித்து ஏராளமான புகார்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.

அப்படித்தான் சமீபத்தில தமிழ் திரையுலகுக்கு காலடி எடுத்து வைத்த நடிகைக்கும் சங்கடம் நிகழ்ந்துள்ளது. மற்ற மொழி படங்களில் நடித்து வந்த அந்த நடிகை தமிழ் சினிமாவில் காலடி எடுத்துள்ளார்.

இதையும் படியுங்க : உண்மையை சொன்னா நாறிடும்.. எச்சரித்த ஐஸ்வர்யா : பதிலடி கொடுத்த தனுஷ்..!!

அண்டை மாநிலத்தில் இருந்து வந்த அந்த நடிகைக்கு தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது. இருந்தும், படம் ஹிட் ஆவதால் நடிகைக்கு மவுசு கூடியுள்ளது.

கிளாமராகவும், ஹோம்லியாகவும் நடித்து வந்த நடிகை தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். தமிழில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தாலும், நடிகருடன் டூயட் பாடி ஆடி சான்ஸ் கிடைத்தாலும் அம்மணி எத்தனை பாட்டுக்கள் உள்ளன, என்ன முக்கியத்துவம் உள்ளன என்பதை கேட்டுத்தான் நடிக்கவே ஒப்புக்கொண்டு வருகிறாராம்.

இதையடுத்து அவருக்கு பெரிய ஸ்டார் நடிகருடன் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. வாய்ப்பு வந்ததும் நடிகை பயங்கர ஹேப்பி. கால்ஷீட் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என நடிகையும் எண்ணியுள்ளார்.

இந்நிலையில் படம் குறித்து நடிகையிடம் நேரடியாக பேச வந்த படக்குழு, கதையை சொல்லியுள்ளனர். பின்னர் ஓபனாகவே நீங்க அட்ஜெஸ்மெண்ட் செய்யணும், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநருக்கு மட்டும் அட்ஜெஸ்மெண்ட் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு டென்ஷனான அந்த நடிகை, படக்குழு சரமாரியாக விமர்சித்துள்ளார். என்னை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். படத்தில் கதைக்காக நான் கிளாமராக நடிக்கிறேன், அது என் தொழில். கதைக்கு தேவையென்றால் நான் ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாணமாக நடிக்க கூட ரெடி.

என் செருப்புக்கு வேலை கொடுக்க கூடாது என்று நான் நினைக்கிறேன். செருப்பை கழட்டி அடிப்பதற்கு முன் புறப்பட்டு விடுங்கள். நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா என காட்டமாக பேசியுள்ளார். துண்டை காணோம் துணியைக் காணோம் என படக்குழு உடனே பறந்துவிட்டதாம்.

இது குறித்து தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் இந்த சம்பவத்தை நடிகை கூறியுள்ளார். மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அமைத்தது போல தமிழ் சினிமாவிலும் அமைக்க வேண்டும் என்பது நடிகைகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…