அரசியல் புள்ளியால் கேள்விக்குறியாகும் படம்..பரிதவிப்பில் ஸ்டார் நடிகையின் கணவர்.!
Author: Selvan22 February 2025, 4:57 pm
ஒல்லி நடிகருக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா
சமீபத்தில் ஒல்லி நடிகரின் படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவரை வைத்து ஸ்டார் நடிகையின் கணவர் எடுத்த படத்தின் நிலைமை பரிதாபமாக உள்ளது.
இதையும் படியுங்க: மேம் ஒரு ‘கிஸ்’அடிச்சுகிடுறேன்…நடுரோட்டில் பிரபல நடிகையிடம் அத்துமீறல்.!
பல நாட்களாக ஷூட்டிங் நடைபெற்று வந்தாலும் படத்தில் வேலைகள் ஆமை வேகத்தில் செல்கிறது,அதற்கு அந்த முக்கிய அரசியல்வாதி காரணம் என சொல்லப்படுகிறது,ஆரம்பத்தில் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய அவர்,அதன் பிறகு கட்சி ஒன்றை ஆரம்பித்து முக்கிய அரசியல் தலைவராக மட்டுமின்றி பல வித சர்ச்சைகளிலும் சிக்கி அரசியல் பயணத்தில் அடிமேல் அடி வாங்கி வருகிறார்.
இந்த நிலையில் தான் ஸ்டார் நடிகையின் கணவர் தன்னுடைய படத்தில் நடிக்க பெரும் தொகையை பேசி முக்கிய ரோல் ஒன்றையும் கொடுத்துள்ளார்,ஆனால் தற்போது படத்திற்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பதே அந்த அரசியல்வாதி தான் என கூறப்படுகிறது.
சமீப காலமாக பிரபல நடிகை மற்றும் முக்கிய காவல்துறை அதிகாரியால் பல வித சட்ட சிக்கலில் சிக்கி தவித்து வரும் சூழலில்,அவரை வைத்து ஷூட்டிங் பண்ண ரொம்ப சிரமப்பட்டு வருகிறார் ஸ்டார் நடிகையின் கணவர்,இதனால் ஸ்டார் நடிகை படத்திற்கு போட்ட காசு எல்லாம் நாமம் தானா என்ற பயத்தோடு இருக்கிறார்,ஒல்லி நடிகரின் படம் ரிலீஸ் ஆகுமா இல்லை பாதாளத்திற்கு செல்லுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.