ஃபிரான்ஸ் நாட்டின் பிரபல தொலைக்காட்சியில் துணிவு.. தீயாய் பரவும் வீடியோ..!
Author: Udayachandran RadhaKrishnan22 January 2023, 4:00 pm
போனி கபூர் – எச்.வினோத் – அஜித் குமார் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக இவர்கள் கூட்டணியில் வெளியாகியுள்ள திரைப்படம் துணிவு. கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.
இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, யோகி பாபு, பிக் பாஸ் பாவனி, அமீர் என பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் ரூ. 100 கோடியை கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் துணிவு படம் பல புதிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில், வெளிநாட்டிலும் இதுவரை ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், ஃபிரான்ஸ் நாட்டில் முன்னணி தொலைக்காட்சியில் ஒன்றில் அஜித்தின் துணிவு படம் ஃபிரென்ச் படங்களை விட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று பேசியுள்ளனர். அந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களால் சமூக சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#ThalaAjith | #Thunivu has been discussed on French TV 🇫🇷
— AJITH FANS KERALA (@AfcKerala) January 22, 2023
pic.twitter.com/uOstqwi9dr