தனது மகன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை நடிகர் மாதவன் பகிர்ந்திருக்கிறார். அதுபற்றி அவர் எழுதிய பதிவு பலரையும் புன்னகைக்க செய்திருக்கிறது.
இந்திய திரை உலகில் பிரபல நடிகராக அறியப்படும் மாதவன் அலைபாயுதே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். தமிழகம் முழுவதும் திரை ரசிகர்களை அதன் பிறகு மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டாள் ஆகிய படங்களின் வாயிலாக ஈர்த்தார்.
தமிழ் மட்டுமல்லாது 3 இடியட்ஸ், ரங்தே பசந்தி உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்து மாதவன் புகழ்பெற்றார். மாதவன் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் துடிப்பாக இயங்கிவருபவர்.
அண்மையில் மாதவன் இயக்கத்தில் வெளியான ராக்கெட்ரி திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகமான இஸ்ரோவின் முன்னாள் ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் அவர்களது வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் நம்பி கதாப்பாத்திரத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் மாதவன், சரிதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார்.தற்போது இவருக்கு 16 வயது ஆகிறது. வேதாந்த் மாதவன் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் உள்ளவர். இதனால் இவர் நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். மேலும், இவர் பல நீச்சல் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்றுள்ளார்.
அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வேதாந்த் பங்குபெற்று இருந்தார். இதில் இவர் 7 பதக்கங்களை வென்று அசத்தி இருக்கிறார்.இதற்கு பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் வேதாந்த் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
டென்மார்க் நாட்டில் டேனிஷ் ஓபன் 2022 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 800m பிரீ ஸ்டைல் ஸ்விம்மிங் பிரிவில் கலந்துகொண்ட நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் இந்த போட்டியை 8:17.28 நேரத்தில் முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது இவருக்கு நீச்சல் போட்டியில் கிடைக்கும் இரண்டாவது பதக்கம். சென்ற வாரம் 1500m பிரீ ஸ்டைல் ஸ்விம்மிங் பிரிவில் கலந்து கொண்ட இவர் 15:57:86 நேரத்தில் முடித்து வெள்ளி பதக்கம் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மகன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வேதாந்த் இடுப்பில் வெயிட்டை கட்டிக்கொண்டு கம்பியில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்கிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்திருக்கும் மாதவன், அதில்,”இதுபோல ஒன்றையாவது விரைவில் செய்ய வேண்டும். கனவில் இதனை பயிற்சி செய்தது போதும். மகனிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய நேரம் இது” எனக் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.