அவ்ளோவ் கெஞ்சியும் என்ன டயலாக் பேசவிடல: வடிவேலுவின் முகத்திரையை கிழித்த பிரபல நடிகர்!

Author: Shree
18 March 2023, 3:29 pm

சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது விவேக் மற்றும் வடிவேலு உடன் நடித்த அனுபவம் பற்றி நடிகர் ஸ்வாமிநாதன் பேசியுள்ளார். அந்த பேட்டியில், என் படங்களை பார்த்துவிட்டு விவேக் சார் போன் பண்ணி, நல்லா பண்ணிருக்கீங்க என்று பாராட்டும் உள்ளம் கொண்டவர். தங்கமான மனுஷன் விவேக். அவருக்கு ஈகோ இருக்காது. அவர் வளர்த்த மரங்கள், அவரைப் பற்றி பேசும் என்றார்.

வடிவேலு குறித்து பேசியபோது, சிரித்துக்கொண்டிருந்த முகம் மாறியது… அவரோடு நடிக்கும் காமெடியன்களை நடிக்கவே விட மாட்டார். அவரை விட நாம் வளர்ந்திட கூடாது என்ற எண்ணம் கொண்டவர். ஆறு படத்தில் அவரிடம் மாட்டிக்கிட்டேன். என்னை டயலாக்கே பேசவிடாமல் பண்ணாரு. எவ்வளவோ கெஞ்சியும் ஒன்னும் நடக்கல.

பின்னர் நானே கேப்பில் ஒரு டயலாக் விட்டேன் அதை பார்த்து அங்கிருந்தவர்கள் கைதட்டினார்கள். அதன் பின்னர் தான் வடிவேலு ‘நல்லா பண்றீங்க, தொடர்ந்து என் கூட பண்ணுங்க’ என்று வடிவேலு கூறினார். பின்னர் அவர் படங்களில் கூப்பிடுகிறேன் என நம்பர் வாங்கியவர் இதுவரை கூப்பிடவே இல்லை. வடிவேலு நல்ல காமெடியன் தான், நல்லா பண்ற காமெடியன்களை பேச விடாமல் தடுப்பது தப்பு. அனைவருக்கும் திறமைக்கு ஏற்ப வாய்ப்பு தர வேண்டும் என வடிவேலு மீது உள்ள ஆதங்கத்தை வெளிப்படையாக கூறினார்.

https://www.facebook.com/watch/?v=216905894223065&ref=sharing

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?