சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா, நெபுலைசர் கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.அந்த பதிவில்
ஒரு மாற்றுவழியை முயற்சி செய்து பாருங்கள் எனக் கூறி ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது பற்றி குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தி லிவர் டாக் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பேசி வரும் டாக்டர் சிரியாக் ஏபி பிலிப்ஸ் என்பவர் கண்டனம் தெரிவித்து, இருந்தார்.தனது பதிவில் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ கல்வியறிவு இல்லாமல் பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் இது போன்ற மருத்துவ முறைகளை சமந்தா பயன்படுத்தச் சொல்லி அறிவுறுத்துவது சரியானது அல்ல. சமந்தாவுக்கு அபராதம் விதிக்க வேண்டும் அல்லது சிறையில் அடைக்க வேண்டும் என பதிவிட்டார்.
இதுபற்றி விளக்கம் அளித்துள்ள சமந்தா, ‛‛நல்ல எண்ணத்தில் மட்டுமே நான் அந்த மருத்துவ முறையை பரிந்துரை செய்தேன்.
இந்த சிகிச்சை முறையை எனக்கு பரிந்துரை செய்தவரும் ஒரு மருத்துவர் தான்.ஒரு ஜென்டில்மேன் எனது பதிவை தாக்கி பதிவிட்டுள்ளார். அவர் ஒரு டாக்டர் என்பதால் மருத்துவம் தொடர்பாக அவருக்கு நிறைய விஷயங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும். அவர் பேசிய வார்த்தைகள் கடுமையாக உள்ளது. குறிப்பாக என்னை சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
என்னை விமர்சிப்பதற்கு பதிலாக எனது மருத்துவருடன் நேருக்கு நேர் அவர் பேசுவது பொருத்தமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.இந்தப் பதிவு வைரல் ஆகி உள்ளது.