சிறந்த வெளிநாட்டுப் படம்; இலண்டனில் விருது வென்ற தனுஷின் சரித்திர படம்;உற்சாகத்தில் ரசிகர்கள்

Author: Sudha
5 July 2024, 6:12 pm

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஆங்கிலேயர் காலகட்டத்தில் அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த, கேப்டன் மில்லரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் கேப்டன் மில்லர்.

தனுஷ், பிரியங்கா மோகன் இவர்களுடன் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்படப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கேப்டன் மில்லர் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. ஓடிடி யில் வெளியான இப்படம், உலகெங்கிலும் உள்ள 14 நாடுகளில் டாப் 10 தரவரிசையில் இடம் பிடித்தது.

10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில் “கேப்டன் மில்லர்” ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவின் கீழ் விருது பெற்றுள்ளது.

“கேப்டன் மில்லர்” படம், உலகின் பல சிறந்த வெளிநாட்டுப் படங்களுடன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

லண்டனில் உள்ள போர்செஸ்டர் ஹாலில் நேற்று நடைபெற்ற 10 வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளின் போது, சத்யஜோதி பிலிம்ஸின் ‘கேப்டன் மில்லர்’ ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருது’ பெற்றுள்ளது. இந்த செய்தியினை ரசிகர்கள் தற்போது, மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?