சில்க் ஸ்மிதா இருந்தால் ஷூட்டிங்கில் அந்த விஷயம் நடக்கும்.. வெளிப்படையாக கூறிய மைக் மோகன்..!

Author: Vignesh
3 June 2024, 10:31 am

இந்திய சினிமாவின் மர்லின் மன்ட்ரோ என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா செல்லுலாய்டு முதல் டிஜிட்டல் வரையிலான இந்திய சினிமா வரலாற்றில் தன்னுடைய இடத்தை வேறொரு நடிகையால் நிரப்ப முடியாத படிக்கு ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக திரைத்துறையில் வாழ்க்கையை துவங்கிய இவர் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.

silk smitha - updatenews360

மேலும் படிக்க: மேலும் படிக்க: ஒதுங்கிய சூர்யா, இறங்கிய கவின்.. 18 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் 2-ம் பாகம்..!

அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு விதமான கிளாமரான காட்சிகளில் நடித்தார். திருமண வாழ்க்கையில் பெரும் துன்பவங்களை அனுபவித்த சில்க் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.

silk smitha - updatenews360 d

மேலும் படிக்க: ராயன் பட ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு.. உங்க ஸ்பீடு புரியுது ஆனா பாலா இருக்காரு பார்த்து..!

பல்வேறு மலையாள மொழி திரைப்படங்களில் அதிகம் படங்கள் நடித்துள்ளார். இவரது மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இந்நிலையில், தற்போது சில்க் ஸ்மிதா குறித்து மைக் மோகன் பேசியுள்ளார். அதில், அவர் படங்களில் வேண்டுமென்றால் சில்க் ஸ்மிதா கிளாமராக நடிக்கலாம் நிஜத்தில் மிகவும் நல்லவர். எனக்கு அவரை நன்றாகவே தெரியும், நான் அவருடைய நடிப்பு மற்றும் அவருடைய கேரக்டரை பார்த்து வியந்து போய் இருக்கிறேன். சில்க் ஸ்மிதா படப்பிடிப்பு என்றாலே, ரசிகர்களை தாண்டி தயாரிப்பாளர்கள் பைனான்சியர்கள் என பலர் வந்து காத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், எந்த இடத்திலும் சில்க் ஸ்மிதா அலட்டிக்கவே மாட்டார். ரொம்ப ரொம்ப சாதாரணமாகவே பழகுவார். அவர் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள கஷ்டமாகத்தான் இருக்கிறது என பேசியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி