நா ரெடி தான் பாடலுக்கு எலிசா தாஸ் ஏஜென்ட் டினாவுடன் குத்தாட்டம்.. வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
1 November 2023, 5:54 pm

மலையாள நடிகையான மடோனா செபாஸ்டின் சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். ஆனால் அன்றாடம் தன்னுடைய வாழ்வில் நடக்கக்கூடிய விஷயங்களையும் இணையத்தில் பதிவிட்டு வரும் இவர் தற்போது சமீபத்தில் கூட கருப்பு நிற மாடர்ன் உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து விழி பிதுங்க வைத்தார்.

கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் பிரேமம் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். அதையடுத்து நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான பவர் பாண்டி என்ற படத்தில் நடித்திருக்கிறார். கவண் திரைப்படத்தில் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் ஜூங்கா படத்தில் தோல்வியை தழுவினார். அதன்பிறகு போதுமான பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார்.

இதனால், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடு வாய்ப்பு தேடினார். அதன்பிறகு வாய்ப்புகள் கிடைத்தது. விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான லியோ படத்தில் மடோனா செபாஸ்டியன் சிறிய ரோலில் நடித்திருந்தார். அந்த ரோலில் அவர் நடிக்காமல் இருக்கலாம் என்று சிலர் அவர் மீது விமர்சனம் வைத்தனர்.

leo-updatenews360

இதனிடையே, நா ரெடி தான் பாடலில் லியோ படத்தில் விஜயுடன் மடோனா செபஸ்டின் இணைந்து நடனம் ஆடியிருப்பார். அதிலும் குறிப்பாக விடாமல் 30 வினாடிகள் விஜயுடன் இணைந்து சிங்கிள் ஷாட்டில் நடனம் ஆடி இருப்பார். இதற்காக மடோனா நடன இயக்குனர் வசந்த உடன் இருந்து பயிற்சி செய்யும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மடோனா சாபாஸ்டியனுக்கு பயிற்சி கொடுக்கும் வசந்தி தான் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 392

    1

    0