பிக்பாஸில் Bus ட்ரைவர் ஷர்மிளா? Plan’னோடு தான் பரிசு கொடுத்தாரா கமல்?
Author: Shree27 June 2023, 6:28 pm
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வலம் வந்த ஷர்மிளா திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். காரணம் திமுக துணை பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி அவர்கள் ஷர்மிளா ஓட்டிய பேருந்தில் பயணித்திருந்தார். அப்போது அவர் சர்மிளாவை பேருந்தில் கட்டி அணைத்து பாராட்டி கைக்கடிகாரம் சர்மிளாவை பரிசாக அளித்திருக்கிறார்.
அதன் பின் கண்ரக்டருக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு பெண் கண்டக்டர் ஒரு மாதிரியாக பேசுகிறார் நான் ரிலீவ் ஆகிக்கொள்கிறேன் என்று சர்மிளா ஏற்கனவே கூறியிருக்கிறார். அதன் பின் தன்மானத்தை இழந்து நான் வேலை செய்ய மாட்டேன். பேருந்து ஓட்டவில்லை என்றால் நான் ஆட்டோ, கார் வாங்கி ஓட்டி பிழைத்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.
ஷர்மிளாவின் இந்த விவகாரம் குறித்து கேள்விப்பட்ட நடிகர் கமல், அவருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்ததாக அது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியது. இது குறித்து பேட்டி அளித்த ஷர்மிளாவின் தந்தை, ” என் மகளுக்கு கமல் கார் கொடுக்கவே இல்லை” என அதிர்ச்சி அளித்தார். கமல் கார் வாங்குமாறு அட்வான்ஸ் பணமாக 3 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் என்றும் கூறினார்.
கமல் ஹாசனின் இந்த செயல் பாராட்டு பெற்று வந்த நிலையில் தற்போது சிரிக்க கூடிய அளவிற்கு ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆம், ஷர்மிளாவை கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறக்கவுள்ளாராம். இதனால் ஷர்மிளா அடுத்த ஜூலி ஆக விரைவில் பார்க்கலாம் என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து தள்ளியுள்ளனர்.