பொதுவெளியில் சொன்னால் பிரச்சனை.. இந்த தப்பை மட்டும் பண்ணவே கூடாது; பாண்டவர் பூமி நடிகை எமோஷனல்..!

Author: Vignesh
20 February 2024, 6:26 pm

கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பாண்டவர் பூமி படத்தின் மூலமாக பிரபலமானவர் ஷமிதா. அந்த படத்தில் இடம்பெற்ற தோழா தோழா பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ஷமிதா சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.

Shamitha Shreekumar

சிவசக்தி, வசந்தம், பிள்ளை நிலா உள்ளிட்ட பல வெற்றி தொடர்களில் நடித்த அவர் மௌன ராகம் சீரியல் நடிகர் ஸ்ரீகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் விஜய் டிவியின் பொன்னி என்ற சீரியல் நடித்து வந்த நிலையில், கடந்த வருடம் அதிலிருந்தும் விலகி விட்டார். ஸ்ரீகுமார் தற்போது சன் டிவியில் வானத்தைப்போல சீரியல் ஹீரோவாக நடித்து வருகிறார். ஷமிதா அவரது கணவர் ஸ்ரீகுமாரை விவாகரத்து செய்துவிட்டார் என முன்பு தகவல் பரவியது. ஆனால், அது உண்மை இல்லை என இருவரும் தற்போது விளக்கம் கொடுத்திருந்தனர்.

Shamitha Shreekumar

இந்நிலையில், ஷமிதா சில காலங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில், பிரபலங்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை பற்றிய ரகசியங்களை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டால் அவற்றால் நடக்கும் விபரீதங்கள் குறித்து எமோஷனலாக பேசியிருந்தார். சின்னத்திரையோ வெள்ளித்திரையோ அனைவருக்கும் வாய்ப்புகள் என்பது எப்போதும் கிடைப்பதில்லை.

Shamitha Shreekumar

அதேபோல, பிரபலங்கள் அனைவருக்கும் அவரவருக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒன்றுமில்லை. அதில், நடக்கும் நல்லது மற்றும் தீயதை தங்கள் குடும்பத்திற்குள் வைத்துக் கொள்வதை மிகவும் நல்லது. அதைப்பற்றி பொதுவெளியில் பேசினால் அந்த பிரச்சினை இன்றும் பெரிதாகத்தான் செய்யும் எனவும், அதற்கு எந்த தீர்வும் இறுதிவரை கிடைக்காது என்று அவர் எமோஷனலாக பேசி இருந்தார்.

  • Ajith Kumar racing photos viral வீழ்வேனென்று நினைத்தாயோ:விபத்துக்கு பின் மீண்டும் ரேஸில் சீறிய அஜித்…வைரலாகும் வீடியோ…!
  • Views: - 380

    0

    0