மீண்டும் இணையும் “டான்” ஜோடி ; இனி எல்லாம் “மாஸ்” தான்

Author: Sudha
4 July 2024, 6:18 pm

சிவகார்த்திகேயன் நடிப்பில் 5 மாதங்களுக்கு முன்பு வெளிவந்து குழந்தைகளை கவர்ந்த திரைப்படம் அயலான்.

சிவ கார்த்திகேயனின் 23 வது திரைப்படத்தை பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வந்து விட்ட நிலையில் SK24 குறித்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

இந்த திரைப்படத்தில் டான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் இணைகிறார் சிவ கார்த்திகேயன். இது ஏற்கனவே ஹிட் தந்த ஜோடி என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்த படத்திற்கு “பாஸ்” என்று பெயர் வைக்கப் பட்டுள்ளதாக திரை வட்டாரம் சொல்கிறது. ஏற்கனவே தமிழில் பாஸ் என்கின்ற பாஸ்கரன், சிவாஜி தி பாஸ் ஆகிய டைட்டில்கள் இருக்க சிவகார்த்திகேயனின் “பாஸ்” இதே பாணியில் ஹிட் கொடுக்கும் என நம்பலாம்.

  • Lyca Production Plan to Shutdown சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய தயாரிப்பு நிறுவனம்.. ரஜினி, அஜித்தால் திவால் ஆகிறதா?