முடி வெட்ட ஒரு லட்சமா..யார் இந்த ‘ஆலிம் ஹக்கீம்’…காத்திருக்கும் பிரபலங்கள்.!
Author: Selvan21 March 2025, 8:51 pm
பிரபலங்களின் ஹேர் ஸ்டைலிஸ்ட்
சாதாரண ஹேர் கட்டிங்கிற்கு 20 ரூபாய் வசூலித்தவர்,இன்று ஒரு ஹேர் கட்டிங்கிற்கு 1 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கிறார் ஆலிம் ஹக்கீம்.திரைப்பிரபலங்கள் பலர் இவரிடம் முடி வெட்ட வரிசையில் காத்திருக்கிறார்களாம்.
இதையும் படியுங்க: சரவெடி ஆரம்பம்.! IPL-லில் புது ரூல்ஸ்…ரசிகர்கள் குஷி..!
ரஜினிகாந்த்,ஷாருக் கான்,ரன்வீர் சிங்,ரன்பீர் கபூர் முதல் விராட் கோலி,எம்.எஸ். தோனி போன்ற பிரபலங்கள் ஆலிம் ஹக்கீமிடம் ஹேர் கட்டிங் செய்து கொள்கிறார்கள்,இவர்களிடம் ஆலிம் ஹக்கீம் ஒரு ஹேர் கட்டிங்கிற்கு 1 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கிறார்.
ஆலிம் ஹக்கீமிடம் ஹேர் கட்டிங் செய்ய பிரபலங்கள் முன்கூட்டியே அப்பாயிண்ட்மென்ட் எடுத்து வரிசையில் காத்திருக்கிறார்கள்,1 லட்சம் ரூபாய் செலுத்தியும்,அவரிடம் ஹேர் ஸ்டைல் மாற்றிக் கொள்வதை பெருமையாக கருதுகிறார்கள்.ஆலிம் ஹக்கீமின் திறமை வயதானவர்களையும் இளமை தோற்றமளிக்கச்செய்வதாக கூறப்படுகிறது.
இவர் தனது பயணத்தை வெறும் 20 ரூபாய் ஹேர் கட்டிங்கில் தொடங்கியுள்ளார்.
தந்தை இறந்தபின் குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது, ஆலிம் ஹக்கீமின் தந்தை பாலிவுட் நடிகர்களுக்கு ஹேர் கட்டிங் செய்த பிரபலமானவர்.ஷோலே,ஜன்சீர்,டான் போன்ற திரைப்படங்களில் ஹேர் ஸ்டைலிஸ்டாக பணியாற்றியவர்.
திடீரென தந்தை காலமானதால்,குடும்பம் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டது.அப்போது,தனது முதல் ஹேர் கட்டிங்கிற்காக 20 ரூபாய் நிர்ணயித்து வேலை செய்ய தொடங்கினார்.மெதுவாக 30 ரூபாய் 50 ரூபாய் என வளர்ந்து,இன்று இந்தியாவின் முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக உயர்ந்துள்ளார்.
இந்த நிலைமையில்,இவர் தற்போது பல திரை பிரபலங்கள்,கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களுக்கு மட்டும் ஹேர் ஸ்டைலிங் செய்து வருகிறார்.சிறிய வயதில் கடின உழைப்பால் வெற்றி பெற்ற ஆலிம் ஹக்கீம் இன்று இந்தியாவின் நம்பர் 1 ஹேர் ஸ்டைலிஸ்டாக வலம் வருகிறார்.