யார் அந்த ரம்யா… இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை வறுத்தெடுக்கும். நெட்டிசன்கள்.!

Author: Selvan
23 February 2025, 2:11 pm

ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,இப்படத்தில் அஜித் மூன்று கெட்டப்களில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிகரித்தது.

இதையும் படியுங்க: அஜித்திற்கு என்ன ஆச்சு…விபத்தில் சிக்கிய கார்..பதறவைக்கும் வீடியோ.!

மேலும் ஆதிக் தீவிர அஜித் ரசிகர் என்பதால் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து செதுக்கியுள்ளார்,படம் ஏற்கனவே பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அஜித்தின் இன்னொரு படமான விடாமுயற்சி திரைப்படத்திற்காக குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்ததது,அதன்படி இப்படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்த நிலையில்,நேற்று படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டது.

அதாவது படத்தில் நடிகையாக நடித்திருக்கும் திரிஷா கதாபாத்திரத்தின் பெயரை படக்குழு வெளியிட்டது.இப்படத்தில் திரிஷா ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,இயக்குனர் ஆதிக்கின் முந்தய படங்களில் நடித்த நடிகைகள் அனைவருக்கும் ரம்யா என்று தான் பெயர் வைத்துள்ளார்.

தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்திலும் திரிஷாவிற்கு ரம்யா பெயரை வைத்துள்ளதால்,ரசிகர்கள் பலரும் யார் அந்த ரம்யா என்று கேள்வி கேட்டு வருகின்றனர் மேலும் சிலர் ஆதிக்கின் முன்னாள் காதலியின் பெயராக இருக்குமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!
  • Leave a Reply