ரிலீசுக்கு தயாரான ‘டீன்ஸ்’.. போலீசில் புகார் அளித்த பார்த்திபன்- இப்படி ஒரு சிக்கலா..!
Author: Vignesh5 July 2024, 8:06 pm
சினிமாவில் ஏதோ படங்கள் எடுக்க வேண்டும் என்று இல்லாமல் வித்தியாசமாக இதுவரை யாரும் முயற்சி செய்யாத விஷயங்களை செய்ய வேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு பார்த்திபன் படங்களை எடுப்பவர். தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமமான இவர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தார். பின்னர் சில படங்களை இயக்கியும் படங்களில் நடித்தும் இருக்கிறார்.
இந்நிலையில், ‘டீன்ஸ்’ என்ற பெயரில் தற்போது படம் இயக்கி வருகிறாராம். அந்த அந்த படத்தின் விஎப்எக்ஸ் பணிகளை செய்த நிறுவனத்தின் மீது தான் புகார் கொடுத்து இருக்கிறார் பார்த்திபன். அதாவது விஎப்எக்ஸ் காட்சிகளை உருவாக்க கோவையை சேர்ந்த சிவப்பிரதாஸ் என்பவர் பணியாற்றி வந்தாராம். அதற்காக 68.5 லட்சம் பேசப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் மாதமே முடித்துக் கொடுக்கிறேன் எனக் கூறிய அவருக்கு 42 லட்சம் பணம் கொடுத்து இருக்கிறார். அவர் தாமதம் செய்த காரணத்தால் முழு பணத்தையும் பார்த்திபன் தராமல் இருந்திருக்கிறார். இந்நிலையில், மீண்டும் 84.4 லட்சம் பணம் கேட்டு ஈமெயில் வந்த நிலையில், அந்த நபர் மீது பார்த்திபன் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.