விடாமுயற்சிக்கு GoodBye சொல்லும் லைகா..? அதிர்ச்சியில் கோலிவுட்.. அப்போ இனி அவ்ளோதானா..?

Author: Rajesh
20 August 2023, 1:50 pm

தமிழ் திரையுலகில் டாப் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் AK62. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்னர், அவரது கதை பிடிக்காததால் AK62 மகழ் திருமேனியிடம் கொடுக்கப்பட்டது.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். பின்னர், அஜித்தின் பிறந்தநாள் அன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் AK62 டைட்டில் “விடாமுயற்சி” என அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் த்ரிஷாவை கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், ஷூட்டிங் தள்ளிப்போகவே, த்ரிஷா வேறு சில படங்களில் கமிட் ஆனதாக சொல்லப்படுகிறது. இன்னும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என தெரியாத நிலை நிலவி வருவதால், தயாரிப்பு நிறுவனமான லைகா கடும் அப்செட் ஆகி உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பை இந்த வாரம் ஆரம்பித்து விடலாம் என காத்து இருந்த லைகாவுக்கு மீண்டும் அஜித் தரப்பில் இருந்து படப்பிடிப்பு ஆரம்பமாக தாமதமாகும் என சொன்ன தகவலால் லைகா நிறுவனம் விலகப் போவதாக பரபரப்பு தகவல்கள் கோலிவுட்டில் பரவி வருகிறது.

ஆனால், AK62 அறிவிப்பை வெளியிடும் போதே விடாமுயற்சியின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் 65 கோடிக்கு விற்று விட்ட நிலையில், விலக முடியாமல் லைகா நிறுவனம் சிக்கித் தவித்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்த மாதத்திற்குள் அஜித் படம் தொடங்கப்படவில்லை என்றால், லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தில் இருந்து விலகிவிடும் என அஜித் தரப்புக்கு சொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!