தாய் கிழவி கிட்ட வாடி… ஒரு வருடம் நிறைவு செய்ததை கொண்டாடிய திருச்சிற்றம்பலம் படக்குழு!
Author: Shree19 August 2023, 3:57 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் பெரிதாக திரைத்துறை சேர்ந்த பின் பலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து ஹீரோவுக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் தொடர்ந்து தனது முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று உச்ச நடிகராக மார்க்கெட் பிடித்துவிட்டார்.
2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமான தனுஷ் பல கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மக்கள் மனதில் பிரபலமான முகமாக பார்க்கப்பட துவங்கினார்.

வணிக ரீதியில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார்.
அப்புறம் என்ன தொட்டதெல்லாம் ஹிட் என்றவாறு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். திருடா திருடி, தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.
மேலும் சுள்ளான், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம்,பொல்லாதவன் , யாரடி நீ மோகினி, படிக்காதவன், ஆடுகளம், வேங்கை, மயக்கம் என்ன, மரியான், வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்க மகன்,ப. பாண்டி , வேலையில்லா பட்டதாரி 2, வட சென்னை, அசுரன், கர்ணன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகராக இருக்கிறார்.
தனுஷ் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டிருக்கிறார். இதனிடையே பாலிவுட், ஹாலிவுட் என நடித்து வருகிறார். இதனிடையே தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் தனுஷ் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இவர் சிறந்த நடிகராக இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் வீக் என்பது திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கே தெரியும்.
அதனால் நடிகைகளே இவருடன் நடிக்க கொஞ்சம் தயங்குவார்கள். அட்ஜெஸ்ட்மெண்டிற்கு தயங்காமல் ஓகே சொல்லும் நடிகைகள் தான் தனுஷ் உடன் நடிக்க முடியும் என பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகும். அனால் அதையெல்லாம் தாண்டி அவர் தொடர்ந்து முன்னணி நடிகராகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவு செய்ததை அப்படக்குழு சக்ஸஸ் மீட் வைத்து கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ள தனுஷ், ” நன்றி சொல்ல நிறைய இருக்கிறது. எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை. ஒரு திரைப்படம் மற்றும் குடும்பம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, நான் தினமும் மிஸ் செய்கிறேன். இந்தப் படத்தை எங்களுக்காக கூடுதல் சிறப்புற உருவாக்கியதற்கு அனைவருக்கும் நன்றி. திரு மற்றும் ஷோபனா #திருச்சிற்றம்பலம் என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதில் தனுஷ் உடன் படத்தின் இயக்குனர், நடிகர் பிரகாஷ் ராஜ், நித்யா மேனன் , அறந்தாங்கி நிஷாமற்றும் படக்குழு கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.