ரூ.100 கோடியை தொட முடியாமல் தவிக்கிறதா வேட்டையன்.? 10 நாள் வசூல் விபரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2024, 6:17 pm

வேட்டையன் படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில் மொத்த வசூல் விபரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 10ஆம் தேதி லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

படம் வெளியான 4 நாட்களில் நல்ல வசூல் குவித்த நிலையில், மழை காரணமாக வரவேற்பு குறைந்தது. படத்தின் கதை நல்லா இருக்கு, திரைக்கதை அமைத்த விதம் ரஜினிக்காகவே செய்துள்ளதாக விமர்சனம் எழுந்தது.

இதையும் படியுங்க: மாநாடு குறித்து விஜய் அறிக்கை… ரசிகர்கள் அதிர்ச்சி!!

இருப்பினும் இந்த படம் லாபமா? நஷ்டமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. படம் உலகம் முழுவதும் ₹100 கோடி ஷேர் செய்துள்ளது.

வேட்டையன் படம் ரிலீசுக்கு முன்பே ₹200 கோடி வசூல் பிசினஸ் மூலம் கிடைத்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு படம் நிச்சயம் லாபகரம் தான் என கூறப்படுகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் செய்த மொத்த வசூல் விபரம் வெளியாகியுள்ளது, படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில், இதுவரை ரூ.95 கோடி வசூலாகியுள்ளது. வரும் வாரத்தில் ரூ.100 கோடி வசூல் செய்துவிடும் என கூறப்படுகிறது..

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ