ரூ.150 கோடி சம்பளம் வாங்கும் அஜித்… 10 வருஷத்துக்கு முன்பு எவ்வளவு வாங்கினார் தெரியுமா?

Author: Rajesh
26 February 2024, 2:33 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் மலையாள திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்து இன்று தவிர்க்க முடியாக நடிகராக இருந்து வருகிறார். காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல அட்டகாசமான படங்களில் நடித்துள்ளார்.

படத்திற்கு படம் தனது மாஸான நடிப்பை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்று அவரை ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் பைக் ரேஸ் , கார் ரேஸ் உள்ளிட்டவற்றில் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார். திரைப்படங்களில் நடித்துக்கொண்டே வேர்ல்டு டூர் சென்று வரும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ajith -updatenews360

இந்நிலையில் 10 வருடத்திற்கு முன் அஜித் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த ஆரம்பம் படத்துக்கு ரூ. 18 கோடி சம்பளம் வாங்கினாராம். தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கப்போகும் திரைப்படத்திற்கு அஜித் ரூ. 150 கோடி சம்பளம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வெறும் 11 வருடங்களில் அஜித்தின் சம்பளம் கிட்டத்தட்ட 132 கோடி ரூபாய் உயர்ந்திருப்பது வியப்பை அளிக்கிறது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 271

    0

    0