10 வருஷமா கிண்டல் அடித்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

Author: Shree
16 November 2023, 5:21 pm

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

keerthi suresh

இதனிடையே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மிட் தோற்றத்திற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தான் சினிமாவிற்கு வந்து சுமார் 10 வருடங்கள் நிறைவடைந்ததை எண்ணி நன்றி கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். அந்த பதிவில், இப்போது தான் கெரியரை துவங்கியது போல் உள்ளது. ஆனால் அதற்குள் 10 வருடங்கள் ஆகிவிட்டது.

என் பயணத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்களான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிக மிகப் பெரிய நன்றி. குறிப்பாக என்னை ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி. அவர்கள் ட்ரோல்கள் தான் என்னுடைய சினிமா வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது என்று கீர்த்தி சுரேஷ் கெட்டதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு நன்றி கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!