₹100 கோடி சம்பளம் வாங்கும் எஸ்கே… விஜய் இடத்தை பிடித்துவிட்டாரா?

Author: Udayachandran RadhaKrishnan
25 October 2024, 1:43 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் சிவகார்த்திகேயன். டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அவர் பின்னர் சினிமாவில் நுழைந்து படிப்படியாக உயர்ந்த நிலைக்கு வந்தார்

தொடர்ந்து வசூல் ரீதியாக வெற்றி படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு ரசிகர் படையே உள்ளது. நடிகர் விஜய் சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் நுழைய உள்ளார்.

இதனால் விஜய் இடத்தை பிடிப்பது யார் என்ற பேச்சு எழுந்தது. அதே சமயம் கோட் படத்தில் விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பது போல காட்சியும், வசனமும் இடம்பெற்றது.

இதையும் படியுங்க: சம்பளத்தில் விஜய்யை முந்திய ரஜினி… கூலி படத்துக்காக இத்தனை கோடி கூலியா?

இதையடுத்து விஜய் இடத்துக்கு எஸ்கே தான் வருவார் என பரவலாக பேசப்பட்டது. தற்போது சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவர்களின் ரஜினி, விஜய் தான் டாப்பில் உள்ளனர்.

ஆனால் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ₹100 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

₹100 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு எஸ்கே முன்னணி நடிகராகிவிட்டாரா? விஜய் இடத்தை நிரப்ப உள்ளாரா போன்ற கேள்விகள் எழுகிறது.

  • Sivakarthikeyan Dhanush in Party Dance Video சிவகார்த்திகேயனுடன் குத்தாட்டம்.. VIBE MODEல் தனுஷ்… : மாஸ் வீடியோ!
  • Views: - 100

    0

    0