மூன்றே மாதத்தில் ரூ. 1000 கோடி வருமானம்… லாபத்தில் குதூகலிக்கும் சன் டிவி!
Author: Shree11 November 2023, 12:36 pm
இந்திய தொலைக்காட்சிகளில் முதன்மையான தொலைக்காட்சிகளில் ஒன்றான சன் டிவி தமிழ் மக்களின் வீடுகளில் டிவி வாங்கியதில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொலைக்காட்சி ஆரம்பம் ஆனது முதல் தற்போது வரை தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டு முன்னணி தொலைக்காட்சியாக சிறந்து விளங்கி வருகிறது.
1992ல் கலாநிதி மாறனால் துவங்கப்பட்ட இந்த தொலைக்காட்சிக்கு போட்டியாக எத்தனை சேனல்கள் வந்தாலும் அவற்றால் தோற்கடிக்க முடியவில்லை. சீரியல், திரைப்படம், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ , செலிப்ரிட்டி ஷோ என வகைவகையாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், 2023ல் ஜூலை முதல் செப்டம்பர் வரை, அதாவது இந்த மூன்று மாதங்களில் மட்டுமே சன் டிவிக்கு ரூ. 1,048 கோடி வருவாய் கிடைத்துள்ளதாம். இது மாபெரும் தொகையாக பார்க்கப்படுகிறது. வெறும் மூன்று மாதத்திலே இவ்வளவு வருமானம் ஈட்டி மற்ற தொலைக்காட்சிகளை அலறவைத்துள்ளது சன் தொலைக்காட்சி.