ரஜினி மீது காதலா…? பெற்றோருக்கு தெரியாமல் சூப்பர் ஸ்டார் வீடு தேடி வந்த 15 வயது சிறுமி!
Author: Shree8 August 2023, 3:55 pm
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரஜினிக்கும் சரி, நெல்சனுக்கும் சரி மிக முக்கியமான படமாகும். இருவருக்கும் தற்போது கட்டாயம் ஒரு வெற்றி தேவை என்பதால் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து நம்பியிருக்கின்றனர். இப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகவுள்ளதால் தயார் நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது ரஜினியின் தீவிர ரசிகையான சேலத்தை சேர்ந்த 15 வயதுள்ள ஒரு சிறுமி ஒருவர் தனது பெற்றோருக்கு தெரியாமல் பள்ளி ஆசிரியரை சந்திக்கபோவதாக கூறிவிட்டு சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் ரஜினி வீட்டின் காவலாளி போலீசாருக்கு தகவல் கூறி சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு சென்றுள்ளனர். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.