16 மொழிகளில் காதல் சொன்ன விஜய்; ஏற்றுக்கொண்ட தெலுங்கின் முன்னணி நாயகி;..
Author: Sudha9 ஜூலை 2024, 1:09 மணி
நண்பன் திரைப்படம் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 2012 இல் வெளிவந்தது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 2009 ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளிவந்த த்ரீ இடியட்ஸ் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் இது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த முதல் விஜய் படம். தெலுங்கு மொழியில் ஸ்நேகிதுடு என மொழிமாற்றம் செய்யப்பட்டு 2012 இல் ஆந்திராவில் வெளியிடப்பட்டது.
அன்னியனுக்கு பிறகு இயக்குனர் ஷங்கருடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றினார் ஹாரிஸ் ஜெயராஜ்.ஆறு பாடல்கள் படத்தில் இடம் பெற்றது.பாடல் வரிகளை பா.விஜய், விவேகா, நா.முத்துக்குமார் மற்றும் மதன் கார்க்கி,ஆகியோர் எழுதினார்கள்.
“அஸ்கு லஸ்கா” பாடலை எழுதியிருந்தார் கார்க்கி. இந்த பாடலில் 16 மொழிகள் இடம் பெற்றன.
ஒரே பாடலில் 16 மொழிகள் இடம் பெற்ற முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
♥ அஸ்க் – துருக்கிய | ♥லாஸ்கா – ஸ்லோவாக்
♥அமூர் – பிரஞ்சு/ஸ்பானிஷ் | ♥ எய் – சீன |
♥ஆஸ்ட் – ஐஸ்லாண்டிக் | ♥லிபே – ஜெர்மன்
♥அஹவா – ஹீப்ரு | ♥பொலிங்கோ – லிங்கலா |
♥சிந்தா – மலாய் | ♥இஷ்க் – அரபு |
♥மெய்லே – லிதுவேனியன் | ♥ லவ்- ஆங்கிலம்
♥இஷ்டம் – தெலுங்கு | ♥பிரேமம் – மலையாளம்
♥பியார் – இந்தி | ♥காதல் – தமிழ்
இந்த அனைத்து வார்த்தைகளுக்கும் அர்த்தம் காதல் தான்…
0
0