அழகில் நயனையும்.. கவர்ச்சியில் கிரணையும் சேர்த்து அனிகா நடத்திய பாத்டப் போட்டோ ஷூட்..!
Author: Vignesh26 March 2024, 3:32 pm
இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அனிகா கேரளா மாநிலத்தை சேர்ந்த அழகான குழந்தையாக திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வருகின்றனர். மேலும் சிலர் குட்டி நயன்தாரா என்றும் அழகைக்கப்பட்டு வருகிறார்.
என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இவர் மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்ரால், ஜெயம் ராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார்.
தற்போது, அனிகா பல படங்களில், கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக 2020 ஆம் ஆண்டு வெளியான கப்பேலா என்ற ரீமேக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். புட்ட பொம்மா என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் லிப் லாக் படுக்கையறை காட்சிகளில் நடித்து மோசமான விமர்சனத்திற்கு ஆளாகினார். இதனிடையே, எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அனிகா சினிமாவை பொறுத்தவரை எனக்கு விஜய் தேவரகொண்டா மீது கிரஷ் அதிகம் இருக்கிறது. என்னை பொறுத்தவரையில், விஜய் தேவரை கொண்டவை பார்த்தாலே எனக்கு ஒரு பீல் ஆகிடும் என அனிகா வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும், ‘பூனையும் பால் குடிக்குமா?’ என ஒண்ணுமே தெரியாத அப்பாவி போல் நடித்த அனிகா, இப்போது லிப் லாக் போன்ற விஷயங்களை அசால்ட் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். மேலும், ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது போல் அனிகா, டாப் நடிகைகளுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் கிளாமரான விஷயங்களை அடித்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது, பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும் அனிகா, சுத்தமாக மேக்கப் இல்லாமல் க்யூட்டாக பாத்டப்பில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.