அதுப்புல கொஞ்சம் ஓவரா ஆடிட்டேன் அதுக்காக இப்படியா?.. பிரபலங்களின் வாய்ப்பை தட்டிப் பறிக்கும் வாரிசு நடிகை..!

Author: Vignesh
22 August 2023, 11:30 am

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

aditi shankar - updatenews360

அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கிய இப்படத்தை நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தார்கள். அதில் கிராமத்து பெண்ணாக நடித்து அதிதி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற “வண்ணாரப்பேட்டையில” என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பாடியிருந்தார். இந்த படமும் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது. அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

aditi shankar - updatenews360

இந்நிலையில், டாக்டர் படிப்பை முடித்து மருத்துவராகாமல் நடிப்பின் மீது ஆசைப்பட்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். முதல் படத்திலேயே நடிகையாக மட்டுமல்லாமல் பாடகி ஆகவும் கலக்கினார். மதுரை வீரன் அழகுல பாடலில் அவர் குரலில் வெளியாகி பாட்டுத் தொட்டி எங்கும் பிரபலமானது.

அந்த பாடலை முன்னதாக இசையமைப்பாளர் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி தான் பாட வைத்திருந்ததாகவும், அதன் பின் தான் அதிதியின் குரலிலும் பாடவைத்து கடைசியில், ராஜலட்சுமி குரலை நீக்கிவிட்டு அதிதியின் குரலை ஓகே செய்து படத்தில் வைத்துள்ளனர்.

aditi shankar-uupdatenews360

இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் வெளியான வண்ணாரப்பேட்டையில் என்று பாடல் பிரபல பாடகி மீனாட்சி இளையராஜா தான் பாடியிருந்தாராம். ஆனால், வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் இருந்த மீனாட்சிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அவர் குரலை நீக்கிவிட்டு அதிதிக்கு குரலுக்கு ஓகே சொல்லிவிட்டனர். இதனால், தான் வருத்தப்பட்டதாக மீனாட்சி இளையராஜா கூறியிருந்தார்.

aditi shankar - updatenews360

இந்த காரணத்தால் ஏழையின் வயிற்றெரிச்சலை சம்பாதிக்கிறார். அதிதி என்று விமர்சனங்களும் ஒரு பக்கம் எழுந்தது. அதிதிக்கு ஒரு படத்தில் கமிட் ஆகினால் அப்படத்தில் பாடவும் வாய்ப்பு கேட்கும் பழக்கம் இருப்பதை அவரை பேட்டியில் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1422

    11

    5