2024ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படம்.. லிஸ்டுல மிஸ் ஆன அமரன்!
Author: Udayachandran RadhaKrishnan22 November 2024, 11:10 am
2024ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என சொல்லலாம். ஏராளமான தமிழ் படங்கள் விருந்தாக திரைக்கு வந்தன.
2024ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள்
அஜித் திரைப்படத்தை தவிர மற்ற நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தன. முன்னணி நடிகர்களான விஜய்யின் கோட், ரஜினியின் வேட்டையன், கமலின் இந்தியன் -2, தனுஷ் நடித்த ராயன், சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன், ஜெயம் ரவியின் பிரதர், விக்ரமின் தங்கலான் என வரிசை கட்டின.

இதைத் தவிர சிறிய பட்ஜெட் படங்கள் கொட்டுக்காளி, சித்தா, போகுமிடம் வெகுதூரமில்லை, வாழை, மகாராஜா என ஏராளமான படங்கள் திரையில் வெற்றி நடைோட்டன.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் இதுவரை விஜயின் கோட் (GOAT) படம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக பார்க்கப்படுகிறது,.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அமரன் படமும், கர்நாடகாவில் கோட் படமும், கேரளாவில் வேட்டையன் படம் முதலிடத்தில் உள்ளது. இந்த தகவலை ரமேஷ் பாலா தனது X தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.