அந்த ஒரே படத்தில் நடித்து அடுத்தடுத்து இறந்து போன 3 நடிகர்கள்.. அதிர்ச்சியில் லால் சலாம் நடிகர்..!
Author: Vignesh27 December 2022, 2:14 pm
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
‘கட்டா குஸ்தி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுமட்டும் இன்றி இந்த படம் வசூலையும் வாரி குவித்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள லால் சலாம் படம் கிரிக்கெட் கதையம்சம் கொண்டது. லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம்.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க உள்ளனர்.
வெண்ணிலா கபடி குழு படம் விஷ்ணு விஷாலுக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் புரோட்டா சூரி காமெடி இப்போது வரை ரசிகர்களால் மறக்க முடியாத காமெடியாக உள்ளது.
இந்த படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை தந்தது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், சூரி, அப்புகுட்டி, நித்திஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து மிகப்பெரிய வெற்றியை தந்தது.
வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த நித்திஷ் வீரா கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து உடல்நிலை குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஹரி வைரவன் அண்மையில் உயிரிழந்தார்.
இது வெண்ணிலா படக்குழுவினருக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. இப்போது இவரைத் தொடர்ந்து இதே படத்தில் நடித்த மாயி சுந்தர் உயிரிழந்துள்ளார். 50 வயது நிரம்பிய மாயி சுந்தர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனளிக்காமல் காலமானார்.
இவ்வாறு வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் ஒவ்வொருவராக மரணித்துள்ளது விஷ்ணு விஷாலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.