ஒரே வருடத்தில் 3 ஹிட் படங்கள்.. இந்திய சினிமாவை அதிர வைத்த ஷாருக்கான்… மலைக்க வைத்த ஒரு வருட வசூல்!!
ஷாருக்கானிடம் இருந்து ஜவான் மற்றும் பதான் வெற்றிக்குப் பிறகு அவரது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டன்கி’ திரைப்படத்தை ரசிகர்கள் அவளுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஷாருக்கானின் இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. தற்போது, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில், வெளியான மூன்று நாட்களில் ‘டன்கி’ ரூ.157 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்பொது, அதன் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உலக முழுவதும் முதல் நாளில் ரூ.58 கோடியும், இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ரூ.45.40 கோடியும், மூன்றாம் நாளான சனிக்கிழமை ரூ.53.82 கோடியும் ஈட்டியது. இப்போது, 4வது நாளான நேற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலின் கணக்கின்படி, ரூ.53.91க்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் இப்படம் ரூ.211.13 கோடி வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பதான் மற்றும் ஜவான் படங்கள் தலா 1000 கோடி என மொத்தம் 2 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது. தற்போது டன்கியும் 200 கோடியை வசூல் செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் ஷாருக்கானின் 3 படங்களும் 3 ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்க உள்ளது.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.